​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 April 2024

சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

22/4/2024 அன்று டணாநாயக்கன் கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் வீரபத்ர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயிலில் பவானிசாகர் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் பக்தர்களுக்கு குருநாதர் தந்த உத்தரவு

அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!

அறிந்தும் கூட அப்பனே எம்முடைய ஆசிகள் இருந்து விட்டாலே போதுமானதப்பா

அப்பனே யானே அனைத்தும் செய்வேன் அப்பனே

இதனால் நல் மனதாகவே அதாவது அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு அப்பனே உணவளித்துக் கொண்டே இருங்கள் அப்பனே

தன்னால் முடியாவிடிலும் அப்பனே நிச்சயம் அப்பனே ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருங்கள் அப்பனே

இச்சித்திரை திங்களில் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் சித்திரகுப்தன் அப்பனே நிச்சயம் கணக்கை எதை என்று அறிய அறிய அழகாகவே எழுதி வைப்பான் அப்பா

(நம் பாவ புண்ணிய கணக்கை)

நீங்கள் என்ன இதில் தன் (சித்திரை மாதத்தில்) செய்கின்றீர்களோ... அதுதான் அப்பா நிச்சயம் கூட புண்ணியங்கள் ஆக்கி அப்பனே வருடம் முழுவதும் கிடைக்கும் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

(அதாவது நாம் அனைவரும் சித்திரை மாதத்தில் செய்யும் அதாவது வாயில்லா ஜீவராசிகளுக்கு இயலாதவர்களுக்கு செய்யும் சேவைகள் அவற்றின் புண்ணியங்களை எல்லாம் சித்திரகுப்தன் அவரவர் புண்ணிய கணக்கில் எழுதி வைத்து அதன் மூலம் ஏற்படும் புண்ணியங்கள் சித்திரை மாதம் முதல் தொட்டு பங்குனி மாதம் வரை இந்த ஒரு வருட காலம் முழுவதும் அந்த புண்ணியங்கள் எதிரொலிக்கும் இது வரும் வரும் எல்லா வருடங்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் நம்மளுடைய கணக்கு தொடங்கும்)

அதனால்தான் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட

இதில் செய்தால் (சித்திரை மாதத்தில்) நிச்சயம் பின்

வைகாசி தன்னில் அப்பனே ஈசன் மனம் மகிழ்ந்து அறிந்தும் கூட அப்பனே பல பாவங்களை அகற்றுவான் (காசி)கங்கை தன்னில் கூட!!!

தன்னால் பின் வர முடியவில்லையே!!!!

(வைகாசியில் காசி பயணம்)

என்போருக்கும் நிச்சயம் அப்பனே ஈசன் அருள் புரிந்து தருவானப்பா!!!!

(அதாவது காசிக்கு செல்ல முடியாத நிலை இருந்தாலும் சித்திரை மாதத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சேவைகள் செய்து அந்த புண்ணியம் இருந்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து அருள்வார்)

இதனால் அறிந்தும் கூட அப்பனே ஆனால் தம் தன் பிள்ளைகள் நன்றாக வேண்டும் பின் அதாவது உணவை உட்கொள்ளாமல் இருந்தால் பின் எவ்வளவு நீங்கள் பாடு படுகின்றீர்கள் அப்பனே!!!

(நம் குழந்தை உணவை உண்ணாமல் பட்டினி கிடந்தால் நம் மனம் எவ்வளவு பாடுப்படுகின்றது அதேபோல் இந்த உலகத்தில் எத்தனை ஜீவராசிகள் உணவில்லாமல் கிடைக்காமல் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மால் முடிந்த சேவையை அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்து கொண்டே வர வேண்டும்)

அதேபோலத்தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது  இவ் ஆன்மா அப்பனே பின் நிச்சயம் தண்டனைக்குரியது!!!!

அதாவது பாவம் புண்ணியம் அதாவது எதை என்று புரிய புரிய இதனால் பின் இரு வருடம் பின் ஒரு மாதம் எதை என்று புரிய புரிய இன்னும் பின் மாதக்கணக்கில் நிச்சயம் பின் அறிந்தும் கூட அவ் ஆன்மா நிச்சயம் பின் இவ்வாறு உலகத்தில் வாழ வேண்டும் என்பதைக் கூட விதி விதிக்கப்பட்டது

இவ்வாறு அறிந்தும் கூட பின் ஒரு மாதம் அறிந்தும் கூடஒரு நாள் கூட அறிந்தும் கூட அவ் ஆன்மா நிச்சயம் அதாவது சொல்கின்றேன் உங்கள் சொந்த பந்தங்களுடனே இருக்கலாம்  அவ் ஆன்மா

அதனால்தான் நிச்சயம் அறிந்தும் கூட வாயில்லா ஜீவராசிகளுக்கு நிச்சயம் செய்யச் சொன்னேன்

அனைவரும் செய்யுங்கள்

தன்னால் முடியவில்லையே என்றாலும் நீரையாவது (குடிநீர்)பின் தானம் செய்யுங்கள் போதுமானது

அறிந்தும் கூட

இதை தானம் செய்யாவிடில் நிச்சயம் பின் அறிந்தும் கூட இறைவன் கூட நிச்சயம் அறிந்தும் கூட நீரை கூட நிச்சயம் நிறுத்தி விடுவான் சொல்லிவிட்டேன்!!!! 

(மழை கூட வராது ஆறு குளம் ஏறி என அனைத்தும் வற்றி விடும்)

அதனால்தான் நிச்சயம் நீர்நிலைகளை (தண்ணீர் பந்தல்கள்) ஏற்படுத்துங்கள்
நிச்சயம் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் உள்ள அனைவருமே பின் அனைவருக்கும் சொந்தம் எதை என்று அறிய அறிய இறைவனே

இதனால் நிச்சயம் நீங்கள் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தான் இறைவனுக்கு எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய

தான் மட்டும் வைத்துக் கொள்கின்றான் மனிதன்

நிச்சயம் சொல்கின்றேன் இறைவன்  அதாவது ஒரு மனிதன் பிறக்கும் பொழுதும் ஏதுமில்லை இறக்கும் பொழுதும் ஏதுமில்லை

நடுவில் இறைவனே கொடுப்பான்!!!

ஆனால் அதை சரியாக உபயோகிக்கவில்லை என்றால் இறைவனே எடுத்துக் கொள்வான் என்றெல்லாம் யான் வாக்குகள் செப்பிக் கொண்டே இருக்கின்றேன்!!!

அதில் நிச்சயம் பின் அறிந்தும் கூட நடுவில் நீங்கள் சரியான வழியில் நிச்சயம் புண்ணியங்கள் பின் செய்தால் நிச்சயம் உங்கள் பரம்பரையையே அது காக்கும்

உங்கள் பிள்ளைகளையும் நிச்சயம் நல்படியாக ஆக்கும்

அதனால் நிச்சயம் இதை யான் சொல்கின்றேன்

இதை செய்திட்டாலே போதுமானது

யானே வந்து உங்களுக்கு வாக்குகள் உங்களுக்கு தருகின்றேன் நிச்சயமாக

ஆசிகள் ஆசிகள்

இன்றளவும் கூட பின் நிச்சயம் யானே அறிந்தும் கூட பின் ஆசிகள் தந்து விட்டேன்

பின் ஒவ்வொருவரின் அதாவது குறைகளையும் கூட நிச்சயம் நீக்கி தருகின்றேன் நல் முறைகள் ஆகவே

அறிந்தும் கூட

பாவம் புண்ணியம் எதை என்று புரிய புரிய எந்தனுக்கே புரியும்

இதனால் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய

என்னிடத்தில் வந்து விட்டாலே யான் பார்த்துக் கொள்வேன்... பல விஷயங்களைக் கூட நீக்கி நீக்கி!!!

அதனால் எந்தனுக்கே தெரியும் அனைத்தும் கூட
அதனால் நீங்கள் கேட்கவே தேவையில்லை

யான் சொல்லியதை கேட்டாலே போதுமானது!!

நல்வழி !!! தீயவழி!!

அறிந்தும் கூட ஆனால் கலியுகத்தில் தீய வழிகளில் தான் மனிதன் செல்வான்.... ஆனால் தீய வழியை விட்டு விடுங்கள் நல்வழிக்கு வாருங்கள்


யான் சொல்லியதை செய்திட்டு வாருங்கள்

நிச்சயம் உங்களுக்கு மீண்டும் வாக்குகள் உண்டு

நிச்சயம் பின் அனைத்தையும் சொல்கின்றேன் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் நீங்கள்

நலன்கள் எம்முடைய ஆசிகள்!!!

அனைவரின் குறையையும் நிச்சயம் யானே நீக்கித் தருகின்றேன்

நலன்கள் ஆசிகள் !!! ஆசிகள்!!!!

காகபுஜண்டர் மகரிஷி சித்ரா பௌர்ணமி நாளில் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் ஆலயத்தில் வைத்து சித்திரை வைகாசி பற்றி வாக்குகளில் சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது

அதில்

இவ் மாதத்தில் அதாவது சித்ரகுப்தனின் மாதமானது இம்மாதத்தில் யான் சொல்வதை சரியாக கவனித்துக் கொண்டு செய்தாலே!! போதுமானது.

ஆனால் யோசித்துக் கொள்ளுங்கள்!!! ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் தன் குழந்தைகளும் உள்ளது இவையன்றி கூற

அவைதன் இறைவனிடத்திலே வேண்டுவதில்லை தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் இவையன்றி கூற..... மனிதனே நீ வேண்டுகின்றாய்!!!! 

அவ் வேண்டுவதற்கு நீ என்ன செய்தாய்?? புண்ணியங்கள்!!!

அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும் மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!

இதனால் செய்க!!  

இதுதான் உண்மை அதை விட்டுவிட்டு இவ் மாதத்தில்  அது நடக்கும்!!! இவ் கிரக பெயர்ச்சிக்கள் ராகுகாலம் இவையெல்லாம் சொல்லி கொண்டே வந்தால்... நிச்சயம் அறிவிழந்து அறிவிழந்து தவித்து விடுவீர்கள்!!!!

சித்திரை மாதம் முழுவதும்) சித்ரகுப்தனின் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி இவையன்றி கூற...அவ் தீபத்தின் வழியே சித்திர குப்தனை பார்த்துப் பார்த்து மனதில் 
"""
சித்ரகுப்தாய நமஹ"""!!! என்று ஓதி, ஓதி , ஓதி, ஓதி ,பல அரசர்களும் மாற்றி அமைத்துக்கொண்டனர் தன் பாதையை.

இதனால் தான் இவ் மாதத்தில் சித்ரகுப்தனை பின் என்றாவது அவந்தனுக்கு சக்கரையை இட்டு அதுவும் சக்கரை எங்கு இட வேண்டும் என்றால் வெற்றிலையிலே இட்டு அவந்தனுக்கு நல் விதமாக பின் தீபமும் ஏற்றி ஏற்றி...  இவை யான்  சொன்னேன் மந்திரத்தை பின் அவ் தீபத்தின் வழியே அவனையும் பார்த்து... 

ஆனாலும் யான் முக்கியத்துவம் தருவேன்... காஞ்சியிலும்!!! அண்ணாமலையிலும்!!! 

காஞ்சியிலும் இதையன்றி கூற...அங்கே அமர்ந்து பின் தீபமேற்றி. ... தீபத்தின் வழியே உற்று நோக்கினால் நிச்சயம் மனமார ஆசீர்வதிப்பான்... 

ஆசீர்வதித்து பின் ""ஏகனையும் "" (ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம்) தரிசித்து....ஏகனையும் தரிசித்தல்!!!

பின்பு அண்ணாமலை அண்ணாமலையும் சென்று எதனையென்று அறிவதற்கு பின் அங்கு அனைத்து லிங்கங்களையும் (கிரிவல அஷ்டலிங்கங்கள் தரிசனம்) பின் பார்த்து உற்று நோக்கிப் பின் கடைசியில் பின் திருத்தலத்திற்குச் சென்று அங்கேயும் "நமச்சிவாயா!! "நமச்சிவாயா!!! என்று அழைத்தால் பின் சித்திரகுப்தனே!!! அவன் எதிரில் நின்று கூட யான் சொல்லி விட்டேன்....

அங்கேயும் அவனை அழைத்து கொண்டே இருந்தால்..... ஓ!!!!  இவந்தன் பின் ஈசனுடைய பக்தன் என்று மனம் இரங்கி சில உதவிகளையும் செய்வான்.

நிச்சயமாய் மனிதர்களே இதை பின்பற்றி கொள்ளுங்கள்!!!

அதனால் சொல்லி விடுகின்றேன் இனிமேலும் எதையன்றி  கூற....

""இவ் மாதத்தில் நிச்சயம் செய்ய வேண்டும்!  

செய்ய வேண்டும் அவை மட்டுமில்லாமல் இன்னும் சொல்கின்றேன் இவ் மாதத்தில் சிறிதளவு துளசியும் துளசியுமின்றி முறையாக அதில் மஞ்சளும் இட்டு சிறிதாக எலுமிச்சை சாற்றையும் இட்டு... அதனுடன் சிறிது நெல்லிக்கனியும் இட்டு... இட்டு இட்டு அதனையும் அருந்தி வர அருந்திவர சில நோய்களும் தீரும்.

(நீரில் துளசி மஞ்சள் பொடி எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு சேர்த்து) நோய்களைத் தீர்ப்பதற்கும் வழிகள் உண்டு வழிகள் உண்டு.

இதனையும் பின் """சித்ரகுப்தா நமஹ"" என்று சொல்லி அதிலும் அவ் நீரிலும் கையில் விட்டு பின் இவற்றின் வழியாக நீயாவது இரங்கு என்று கூறிவிட்டால் நிச்சயம் மனமகிழ்ந்து சித்திரகுப்தன் செய்வான்.(பாத்திரத்தில் இவற்றை கலந்து சித்ரகுப்தனை வேண்டி கையில் இட்டு வணங்கி அருந்த வேண்டும் இம் மாதம் முழுவதும்) 

அதனால் இவையன்றி கூற அவ் மணி நேரத்தைப்(சித்திரை மாதம் முழுவதும்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். மானிட ஜென்மங்களே!!!  அவ் அரைமணி நேரம் தான் இச் சித்திரை திங்கள்!!!

இதையன்றி கூற இதனை பயன்படுத்தி  கொண்டு பின் அடுத்த திங்கள் காசி!!! வரும் அவ் காசியில் எதையன்றி கூற யான் சொல்கின்றேன் மனித ஜென்மங்களுக்கு!!!

வைகாசி என்று சொல்கின்றீர்களே!!! அதுவே காசி!!! 

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி!!!

இதிலும் அடங்கியுள்ளது இவையன்றி கூற ஆனாலும் பலப்பல மாதங்களும் பின் சூட்சுமங்கள் ஆக காணப்படுகின்றது.

என்று காகபுஜண்டர் மகரிஷி சித்திரை மாதத்தின் மற்றும் வைகாசி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் சொல்லி இருக்கின்றார். பக்தர்கள் அனைவரும் பின்பற்றி நல்வாழ்வு பெறுங்கள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!