​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 March 2011

சித்தன் அருள் - 17

"நீ முருகனை காப்பாற்று, நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்று அகத்தியர் சொன்னதை கேட்டு கை கூப்பி நமஸ்காரம் செய்தவர் அடுத்த நிமிடமே என்னிடம் இருந்து விடை பெற்று நேராக சிவகங்கைக்குப் புறப்பட்டார்.  பத்து மணி நேரத்தில் காளையார் கோவிலை அடைந்தவர், தன் உதவியாளரை விட்டு அந்த பையன் முருகனைத் தேட சொன்னார்.  ஆனால் முருகனைக் காணவில்லை.  கோவிலுக்கு வருகிறவர், போகிறவர்களிடமும், கோவில் குருக்களிடமும், இன்னும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் விசாரித்த பொது எல்லோரும் கையை விரித்தார்களே தவிர யாரும் சரியானத் தகவலைச் சொல்லவில்லை.

காரில் உட்கார்ந்து இருந்த சோமசுந்தரத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  மனது மிகவும் சங்கடப்பட்டது.  இது என்ன சோதனை?  என்று நொந்து போனார்.

அப்போது --

கோவிலுக்கு பூ கொடுக்கும் ஒரு வயதான பெரியவர் அங்கு வந்தார்.  எதற்கும் அவரிடம் கேட்டுப்பார்போமே என்று முருகனைப்பற்றி அவரிடம் விசாரித்தார் சோமசுந்தரம்.

"அடடா! அந்த பையனை பற்றியா கேட்கிறீர்கள்.  அவன் என் வீட்டில் தான் இருக்கிறான்.  நான்கு நாட்களாக அவன் அன்ன ஆகாரம் இன்றி இங்கு படுத்திருக்கிறான்.  எனக்கு இது தெரியாது.  நேத்து ராத்திரி ஜுரத்தில் முனகிக் கொண்டிருந்தான்.  அவனருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாக கொதித்தது.  பாவம் பச்சைபிள்ளை ஆயிற்றே என்று அவனை கைத்தாங்கலாக அழைத்து வைத்தியரிடம் கூடிக்கொண்டு போனேன்.  இப்போ அவன் தேவலை என்றவர், ஆமாம் அவனுக்கு நீங்க என்ன உறவு?" என்று கேட்டார்.

"நான் யார் என்கிறதை அப்புறமாகச் சொல்கிறேன்.  எனக்கு முதலில் அவனை பார்க்க வேண்டும்" என்றார் சோமசுந்தரம்.

"இங்கே கூப்பிடுகிற தூரத்தில் தான் என் வீடு இருக்கிறது.  வாருங்கள் போகலாம்" என்று சொல்லிவிட்டு தான் கையோடு கொண்டு வந்த பூக்கூடையை கோவிலுக்கு கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடத்தார்.

அவருக்கு பின்னால் காரை எடுத்து கொண்டு சோமசுந்தரமும் சென்றார்.

பாயில் கம்பிளியால் நன்றாக மூடிக்கொண்டு முருகன் கிழிந்த நாராக படுத்துக்கிடந்தான்.  ஜுரம் குறைந்திருந்தது.  முனகல் இல்லை.  அருகில் கஞ்சி சாப்பிட்டதிற்கு அடையாளமாக டம்ளரும், பாத்திரமும் இருந்தது.

டிரைவர் உதவியாலும், ஊன்று கோலையும் பிடித்துக்கொண்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்த சோமசுந்தரம் படுத்துகிடந்த முருகனைக் கண்டு தன்னை அறியாது கண் கலங்கினார்.

மெதுவாக அவனைத் தொட்டுப்பார்த்தார்.  ஜுரம் குறைந்திருந்தது.  அவன் முகத்தை வாஞ்சையால் தடவினார்.

"ஜில்" என்று தன முகத்தின் மீது எதோ ஒன்று விழுந்தது போல உணர்ந்த முருகன் மெதுவாக கண் விழித்தான்.

எதிரே சோமசுந்தரன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அந்த நிலையிலும் அதிர்ச்சி அடைந்தான்.  அவனால் பேச முடியவில்லை.  தன்னை மீண்டும் கஷ்டபடுத்த தான் சோமசுந்தரம் இங்கு வந்திருக்கிறார் என்று எண்ணி ஜுரத்தில் பயந்து போனான்.

"கவலை படதே முருகா" என்று ஆறுதல் சொன்ன சோமசுந்தரம் "என் கூட வா. அஸ்பத்ரியில் கொண்டு போய் சேர்க்கிறேன்.  எல்லாம் சரியாகப் போய்விடும். அன்னிக்கி நடந்ததை நெனச்சு கவலைப்படாதே" என்று அன்பொழுகச் சொன்னதை கேட்டு, முருகனால் நம்ப முடியவில்லை.

அந்த பூக்கார கிழவர் முருகனுக்கு தைரியம் கொடுத்தார்.  கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தவன், பிறகு சோமசுந்தரத்துடன் காரில் புறப்பட்டு சென்றான்.  துணைக்கு அந்த பூக்கார கிழவரும் காரில் ஏறிகொண்டார்.

இதனென்ன கனவா அல்லது நனவா? என்று முருகனுக்குத் தெரியவில்லை. எப்படி இருந்த சோமசுந்தரம் இப்படி மாறினார்.  இது நல்லதுக்கா, கெட்டதுக்கா என்று அடிக்கடி யோசித்தான்.

தன்னை காப்பாற்றிய பூக்கார கிழவர் மீது முருகனுக்கு தனிப்பாசம் இருந்ததால், கடைசிவரை அவர் தன்னுடன் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினான்.

மதுரையில் உள்ள தனியார் அஸ்பத்ரியில் நல்ல சிகிச்சை பெற்றதால் மூன்று நாளில் முருகன் குணம் அடைந்தான்.  பின்னர் முருகனுக்கு தனியாக ஒரு வீடு எடுத்துக்கொடுத்தார் சோமசுந்தரம்.  சாப்பாட்டுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து மிக நன்றாக கவனித்துகொண்டார்.

இது நிலைக்குமா?  எதற்காக சோமசுந்தரம் இப்படி செய்கிறார் என்று ஒருவித பயத்தோடு தான் முருகன் வாழ்ந்து கொண்டிருந்தான்.  முருகன் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அவனோடு இத்தனை நாள் இருந்து வந்த பூக்கார கிழவர் மெதுவாக விடைபெற்று சிவகங்கைக்கு திரும்பினார்.

தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக எப்படியோ முருகனைக் கண்டுபிடித்து அவனக் காப்பாற்றிய சோமசுந்தரம், அடுத்த கட்ட நடவடிக்கையாக முருகனது பெற்றோரைத் தேடும் பணியில் இறங்கினார்.

மாரியம்மன் தெப்பக்குளத்தின் படிக்கரையில், பித்து பிடித்த நிலையில் முருகனது பெற்றோர் இருப்பதாக தெரிந்தது.  நாலைந்து ஆட்களோடு அங்கு சென்று அவர்களைக் கையோடு காரில் அழைத்து அவர்களுக்கு என்ன என்ன சவுகரியங்கள் செய்து தரவேண்டுமோ அதனைச் செய்து கொடுத்து பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்தார்.

முருகனுக்கு இதெல்லாம் மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது.  சோமசுந்தரம் எவ்வளவு பெரிய ஆள்.  எதற்காக இப்படி செய்கிறார்?  என்னை காப்பாற்றி வேண்டிய உதவிகளைச் செய்ததோடு, என் பெற்றோரையும் காப்பாற்றி அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்கிறாரே என்று சந்தோஷப்பட்டான்.

அதே சமயம், இது எங்கு கொண்டு போய் விடுமோ என்ற அச்சமும் இருந்தது.

இது ஒரு புறம் இருக்க --

அகத்தியர் அருள் வாக்குப்படி அத்தனையும் செய்து முடித்து விட்டோம்.  ஆனால் இன்றுவரை தனக்கு கால்கள் இரண்டும் குணமாகவில்லையே என்ற கவலை சோமசுந்தரத்திற்கு உள்ளூர இருந்தது. 
ஒருவேளை அகத்தியர் வாக்கு பொய்யாகிவிடுமோ?, அப்படி ஆகிவிட்டால் தன் நிலை என்ன? கடைசி வரை இப்படி ஊனத்தோடு தான் இருக்க வேண்டுமா? என்று கவலைப்பட்டுகொண்டிருந்தார்.  கொஞ்சம் கொஞ்சமாக அகத்தியர் வாக்கில் இருந்த நம்பிக்கையும் அவருக்கு குறைந்தது.

இருபத்தி இரண்டு நாட்கள் கழிந்தது --

இனியும் பொறுத்திருக்க முடியாது.  எதற்கும் அகத்தியரின் நாடியை மறுபடியும் படித்து அருள்வாக்கு கேட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு, தன்னையுமறியாமல் சட்டென்று எழுந்தார்.

என்ன ஆச்சரியம்?

ஊன்று கோல் இல்லாமல், யாருடைய துணையும் இல்லாமல் சோமசுந்தரம் இயல்பாக நடக்க ஆரம்பித்தார்.  அவரால் நம்பவே முடியவில்லை.  தன்னை தானே கிள்ளி பார்த்துகொண்டார். 

டாக்டர்களால் முடியாததை, அகத்தியர் செய்து காட்டிவிட்டரே என்ற சந்தோஷத்தை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை.  தான் எத்தனையோ பாவங்களைச் செய்த பின்பும், தனக்கு இறைவன் கருணை காட்டி இருக்கிறானே என்று ஆச்சரியத்துடன் ஆனந்தம் அடைந்தார்.

இந்த காலத்தில் இப்படியும் கூட அதிசயம் நடக்குமோ? என்று எண்ணி எண்ணி அகமகிழ்ந்துபோன சோமசுந்தரம், தானாகப் படி இறங்கி வருவதைக்கண்டு அங்கே இருந்த அத்தனை பேர்களும் அடைந்த ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை.

இனி தான் ஆன்மீக பணியில், அறப்பணியில் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்தார்.  கூடா நட்போடு இணைந்து கோவில் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த நினைத்த பாவத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையை அகத்தியர் விலக்கிவிட்டாரே என்ற பரமானந்தம் காரணமாக அகத்தியருக்கு பல கோவில்களை ஆங்காங்கு எழுப்பவும் திட்டமிட்டார்.

தனக்கு ஞானபலம் கொடுத்த முருகனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் கடைசிவரை எந்தவித கஷ்டமும் இல்லாமல் இருக்க அவர்கள் தங்கி இருந்த வீடும், நிலையான வருமானத்துக்கு உரிய உதவிகளையும் செய்தார்.

இந்த கதையை பின்னர் என்னிடம் சொல்லி முருகனையும் தன்னோடு அழைத்து வந்து வணங்க சொன்னார் சோமசுந்தரன்.

இன்றைக்கு மதுரை வீதியிலே விடியற்காலை நேரத்தில் சோமசுந்தரம் யாருடைய துணையும் இல்லாமல், கை தடியும் இல்லாமல், ஆரோக்கியமாக நடக்க போய் கொண்டிருக்கிறார், தன் வாழ்க்கையை மாற்றியது அகத்தியர் என்று மனதாரச் சொல்கிறார்

3 comments:

  1. Dear Karthi, Me also see the Nadi jothidam. I where i go and When i see. I need contact and address details. My name is Senthilkumar .P and this is my Contact Number: 9710600846.

    ReplyDelete
    Replies
    1. அகத்தியர் ஜீவநாடியானது அகத்தியரின் பிரதான அடியவரான தவத்திரு தங்கராசன் என்பவரிடம் கல்லாரில் உள்ள "ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவ முருகர் ஞான பீடத்தில் உள்ளது. சனிக்கிழமை அன்று ஐந்து பேர்களுக்கு மட்டும்தான் வாசிக்க உத்தரவு உள்ளதாம். யாருக்கு அகத்தியரின் அருள் உண்டோ அவருக்கு மட்டும் அகத்தியர் அருள் புரிவார்.

      திரு.தங்கராசன் சுவாமிகளை 9842027383 என்கிற எண்ணிலும், மாதாஜி சரோஜினி அம்மையாரை 9842550987 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து செல்வது நல்லது என்கிறார்.

      விலாசம்:-

      Sri Agathiyar Gnana Peedam Thirukovil,
      2/464, Agathiyar Nagar,
      Thuripaalam,
      Kallar - 641 305,
      Methupalaiyam,
      Coimbatore.

      Delete