​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 March 2011

சித்தன் அருள் - 23

அந்த இருட்டு வேளையில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை.  காரை விட்டு இறங்கவா? வேண்டாமா? என்று மனம் தத்தளித்தது.  எதற்காக இந்த இளைஞ்சர்கள் காரை வழிமறித்ததோடு, பொறுமையின்றி காரை ஓங்கி அடிக்கவும் செய்கிறார்கள், என்பது சுத்தமாகப் புரியவில்லை.

காருக்குள் அமர்ந்திருந்த அத்தனை பேர் முகத்திலும் எதோ ஒரு வித பயம் இருந்தது மட்டும் உண்மை.  அந்த இளைஞ்சர்கள் தெலுங்கில் சொன்னது ஒன்று மட்டும் புரிந்தது - காரை விட்டு இறங்கு, என்பது தான் அது.

முதலில் டிரைவர் இறங்கினார்.  பிறகு அந்த கோடீஸ்வரர், மூன்றாவதாக நான்.  பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் இறங்கப் பயந்ததால், அவர்கள் காரை விட்டு இறங்கவில்லை.

அந்த இளைஞ்சர்களில் ஒருவன், தன் கையிலிருந்த "டார்ச்" வெளிச்சத்தால் எங்களை மேலும் கீழும் அளந்து பார்த்தான்.

அவர்களைப் பார்த்து "உங்களுக்கு என்ன வேண்டும்.  எதற்காக எங்களை வழி மறிக்கிறீர்கள்?" என்று டிரைவர் கேட்டார்.

"எவ்வளவு பணம், நகை இருக்கு? அதை கொடுத்துவிட்டுப் போ, நாங்கள் நக்சலைட்டுகள்" என்றான் ஒருவன்.

அந்த இருட்டு நேரத்திலும்,  அவருக்கு பயத்தால் வியர்த்துக் கொட்டியது.  "கையில் இருப்பதைக் கொடுக்கிறோம் ஆளை விடு" என்று தனது ஜிப்பாவில் கையை விட்டு கிடைத்த பணத்தை அப்படியே அள்ளிக் கொடுத்தார்.

"அது சரி, காரில் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களது நகைகளையும் சீக்கிரம் கழற்றிக் கொடுக்கச் சொல்லுங்கள்" என்று இன்னொரு இளைஞ்சன் துரிதப்படுத்தினான்.

"அவர்களிடம் நகை ஏதும் இல்லை.  ராமர் கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வந்தோம்.  தாலி மட்டும் தான் இருக்கிறது" என்று அந்த கோடீஸ்வரர் தனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் உளறிக் கொட்டினார்.

"அதெல்லாம் முடியாது.  அவர்களையும் காரை விட்டு இறங்கச் சொல்லுங்கள்" என்று கத்தினான்.

"அவர்களுக்கு உடல் நலம் சரி இல்லை.  அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.  உங்களுக்குத்தான் எல்லாப் பணமும் கொடுத்து விட்டோமே, விட்டு விடு" என்று கார் டிரைவர் அவர்களிடம் மன்றாடினான்.

இவற்றையெல்லாம் திகிலோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை.  காரணம், இந்த இடம் புதுசு, தெலுங்கும் தெரியாது.  அதோடு மாத்திரம் இல்லை, நானோ, அந்த பரதேசியோ அல்லது அந்த கார் டிரைவரோ, அந்த நக்சலைட்டு கும்பலிடம் போராடக்கூடிய அளவுக்கு சக்தி படைத்தவர்கள் இல்லை, தெம்பும் இல்லை.

"சீக்கிரம், சீக்கிரம்" என்று சொன்ன அந்த நக்சலைட்டு கும்பல் சட்டென்று எங்களைத் தள்ளி விட்டு அவர்களாக இந்தப் புறமும் அந்தப் புறமும் சென்று காரின் கதவைத் திறக்க முயன்றனர்.

நல்ல வேளை காரின் கண்ணாடிக் கதவுகள் மேலே ஏற்றப்பட்டு பின்புறக் கதவுகளும் பூட்டி இருந்ததால் அவர்களால் பின்புறக் கதவைத் திறக்க முடியவில்லை.  காரின் உள் இருந்த பெண்களோ "ராமா, ராமா" என்று உரத்த குரலில் பயத்தால் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

எத்தனையோ ஆச்சரியங்களை தெரிந்தோ, தெரியாமலோ நிகழ்த்திக் கொண்டிருந்த அகத்தியர் ஏன் இத்தகைய சோதனைகளை எனக்குத் தர வேண்டும்? இது அவருடைய விளையாட்டா? அல்லது சோதனையா? இல்லை ஏதேனும் தவறு செய்து விட்டோமோ? என்று ஒரு கணம் கலங்கித்தான் போனேன்.

பார்ப்பதற்கு அத்தனை முரடர்கள் போல் இல்ல விட்டாலும், வலுவான உடற்கட்டு இருந்ததால் - அவர்கள் புத்தி கெட்டு அந்த பெண்களை மானபங்கம் செய்து விடக்கூடாதே என்ற பயம் உள்ளுணர்வில் ஏற்பட்டது.

அந்த கோடீஸ்வரர் கொடுத்த பணம் குறைந்த பட்சம் ஐநூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்.  இது போதாதா? என்று நான் எண்ணினாலும் அந்த கோடீஸ்வரர் வீட்டு பெண்கள் அணிந்திருந்த நகைகள் பல ஆயிரம் இருக்கும், அதை இழக்க யாருக்கும் மனம் வராது தான்.

ஆனால்

கத்தியை காட்டி, கழுத்தில் கை வைத்தால் உயிருக்குப் பயந்து எல்லாவற்றையும் கழற்றிக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கும்.  அகத்தியர் நாடி கையிலிருக்கும் பொழுது இப்படியொரு அவலம் ஏற்பட கூடாதே, என்று பயந்தேன்.  காரில் முன் பக்கத்தில் இருந்த நாடியைக் கையில் எடுக்கலாமா என்று யோசித்தேன்.  முன் போகிற போக்கில் அந்த தீவிரவாதிகள் அகத்தியர் நாடியைத் தூக்கிக்கொண்டு போய் விடக் கூடாதே என்ற பயமும் ஏற்பட்டது.

அவர்களிடம் இருந்து ஜீவநாடியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

அவர்கள் என் பக்கம் வரவில்லை என்பதை அறிந்து சட்டென்று கார் பக்கம் சென்று அகத்தியர் ஜீவ நாடியை எடுத்தேன்.

மிகவும் பத்திரமாகப் பட்டுத்துணியில் நன்றாக சுருட்டப்பட்டுக் கிடந்ததால் அது ஒரு உருட்டுக்கட்டை போல இருந்தது.

காரிலிருந்து நான் வேகமாக ஜீவநாடியை எடுத்ததைக் கண்ட அந்த தீவிரவாதிகளில் ஒருவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.

"துப்பாக்கியை எடுக்கிறான்" என்று பயத்தால் கத்தினான்.

இது எனக்கு அரை குறையாக காதில் விழுந்தது.  சம்பந்தமில்லாமல் நான் ஒன்று செய்ய அது அந்த நக்சலைட் இளைஞ்சர்களுக்கு வேறு விதமாக பட, கோபத்தில் கத்தியால் சொருகி விடுவார்களோ என்று என் மனம் வேறு விதமாக எண்ணியது.

"என்னைபார்த்து, துப்பாக்கியை எடுக்கிறான்" என்று சொன்ன குரலைக் கெட்டு, அந்த ஆறு பேர்களும் எடுத்தார்கள் ஒரே ஓட்டம்.

அதற்ககு ஏற்றார் போல், அந்த ரோடில் இரண்டு வண்டிகள் மங்கிய வெளிச்சத்தில் பத்ராசலம் ராமர் கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தன.

"குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" நான் அகத்தியர் ஜீவநாடியை விருட்டென்று எடுக்க, அது துப்பாக்கி போல் அவர்களுக்கு தெரிய, அந்த இருட்டிற்குள் அவர்கள் எடுத்த ஓட்டத்தை இன்றைக்கும் நினைத்தால், மெய் சிலிர்க்கிறது,  ஆச்சரியமாகவும் இருக்கிறது.

நாடியை பாதுகாக்கத்தான் நான் முயன்றேன்.  நாடி இருந்த பையை எடுத்ததுமே அது துப்பாக்கியாக அவர்கள் கண்ணில் தென்படச் செய்தது அகத்தியர் செயலா? இல்லை என்றால் அதை என்னவென்று சொல்வது?

அதற்குள்

நாடு ரோட்டில் நின்று கொண்டிருந்த எங்கள் காரைக் கண்டதும் எதிரே வந்த பயணிகள் வண்டியும், அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில காவல் வண்டியும் வந்து நின்றது.

"என்ன?" என்று கேட்ட பொழுது, எங்கள் காரின் டிரைவர் தெலுங்கில் நடந்த அத்தனை விஷயத்தையும் சொன்னார்.

"நாளைக் காலையில் அவர்கள் அத்தனை பேர்களும் பிடிபடுவார்கள். எதற்கும் நீங்கள் எங்களோடு வந்து போலீசில் ஒரு புகார் கொடுத்து விட்டு போங்கள்" என்ற ஒரு போலீஸ் அதிகாரி என்னை பார்த்து "உண்மையில் நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

"என்னிடம் துப்பாக்கி இல்லை.  அது அகத்தியரின் ஜீவநாடி இருக்கும் பை" என்று சொன்னதும் அப்படியெனில் என்னிடம் கட்டலாமா? என்று பவ்யமாகக் கேட்டார்.

"இது ஏதட வம்பாக போயிட்ட்ரு" என்று அரைகுறை மனதோடு அவரிடம் எடுத்துக் கட்டினேன்.

அதை பார்த்தவர், நாடி பற்றிய விஷயத்தைக் கேட்டறிந்து எனக்கு இப்போது "நாடி" படிக்க முடியுமா?" என்றார்.

இதற்குள் அந்த கோடீஸ்வரர் "என்னிடம் ஒரு நிமிஷம் எதாவது சொல்லி அனுப்பி விடுங்கள்" என்று நச்சரித்தார்.  அவருக்கு போலிசார் கேட்டது பிடிக்கவில்லை.

மொத்தத்தில் இது தேவையா?  யார் யாருக்கு எந்த நேரத்தில், எந்த இடத்தில் வைத்து நாடி படிப்பது என்பதற்கு கட்டுப்பாடு இல்லையா? என்று முனகிக்கொண்டேன்.

2 comments:

  1. vanakkam,
    Naan agathier jeeve naadi parka virumbiukiren,
    thayavu seithu enaku thankalin mugavari matrum mobile no. anuppungal.
    nandriyudan,
    Rajkumar

    ReplyDelete