​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 16 November 2012

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 3


சைவ சமயம் என்றல் என்ன?  யார் அதன் நிறுவனர் என்ற கேள்விக்கு ராமசாமி குருகோன் என்ற ஒரு முருகன் அடியவர் முருகனை கைகாட்டுகிறார்.  சைவ சமயத்தின் விளக்கம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது!  

"எந்த உயிரையும் கொன்று புசித்து வாழாமல், இயற்கை ஆசிர்வதித்த தானியங்களை உண்டு, ஐம்புலக் கட்டுப்பாடுடன் வாழ்க்கை நடத்துபவர்களே, சைவர்கள்!  பிற உயிர்களை கொன்று தின்று உடல் வளர்போருக்கு, தாது சுத்தி என்பது கிடையாது.  தாது சுத்தி இருந்தால் தான் "சித்த மார்க்கம்" கைகூடும்!"

முருகர்/சித்தர்கள்

1 comment: