​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 24 October 2013

சித்தன் அருள் - 145 - நம்பிமலை!

இது வரையில் முக்கண்ணன் சதுரகிரியில் உட்கார்ந்திருந்தான், கைலாய மலையில் உட்கார்ந்திருந்தான், நேற்றைய தினம் மானசரோவரில் உட்கார்ந்திருந்தான், முந்தாநாள், மிலேச்சன் நாட்டுப் பகுதியில் மலை மேல் உட்கார்ந்து, ஆனந்தம் அடைந்திருந்தான். அதே முக்கண்ணன் கூட இதோ வந்து கொண்டிருக்கிறான். அருமை அகத்தியன் மேல் அத்தனை பாசம் அவனுக்கு. அகத்தியன் என்ன சொல்லப் போகிறான் என்பதில் ஆசை. இது ஒட்டுக் கேட்பதல்ல. நேரடியாகவே வந்து உட்கார்ந்து கொண்டு, காது கொடுத்து, காதில் கை வைத்து, அகத்தியன் என்ன சொல்லப்போகிறான் என்று கேட்கிறானே, இந்தக் காட்சி யாருக்கு கிடைக்கும்? அகத்தியன் மேல் எவ்வளவு பெரிய மரியாதை. 

அகத்தியனை  பற்றி அன்றைக்கே நான் சொல்லிவிட்டேன். அகத்தியன் யார்? என்பதை பற்றி எல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பிரம்மாவின் பெரும் பாகத்தை (அதிகாரத்தை) அகத்தியன் கைக்குள் வைத்திருக்கிறேன். சிவபெருமான் அனைத்து தொழிலையும் அகத்தியனிடம் விட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார். விஷ்ணுவோ, "சகலதும் உன்னுடையது" என்று பத்திரமே எழுதிவிட்டு, கையை நீட்டிவிட்டார். ஆக, இந்த மூன்று தெய்வங்களின் மொத்த உருவமாகத்தான் அகத்தியன் நான் வந்திருக்கிறேன். அகத்தியனை எல்லோருமே சாதாரணமாக நினைக்கிறார்கள். ஏதோ தாடிக்கார கிழவன் என்றோ, அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு முனிவன் என்றோ, லோபா முத்திரையுடன் காமத்துடன் உலாவருபவன் என்றெல்லாம் இன்றைக்கும் பேசப்படுகிறதடா. ஆனால், அப்படியல்ல. மூன்று தெய்வங்களின் மொத்த உருவத்தையும், அகத்தியன் நான் வாங்கியிருக்கிறேன். தற்புகழ்ச்சிக்காக, அகத்தியன் நான் இதை சொல்லவில்லை. அகத்தியன் யார் என்று இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை. 

அகத்தியன் சாதாரணமாக, அகம், மனதுக்குள்ளே நான் இருக்கிறேன். யார் யார் எனக்கு வேண்டியபவர் என்றோ, வேண்டாதவர் என்றோ என்பது அல்ல. எம் மனத்தாரும், எந்த குலத்தாரும், எந்த ஜாதியை சேர்ந்தவர்களும், எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் அகத்தியன் கவலைப் பட்டதாக, வரலாறே கிடையாது. ஆனால், யார் ஒருவன், அகத்தியனை நம்பி, அடி, முடியுடன் விழுந்துவிட்டானோ, அவனை கடைசி வரை கை தூக்கி விடாமல் இருக்க மாட்டேன். பலமுறை யாம் உரைத்திருக்கிறேன், உங்களுகெல்லாம் தோளாக, தூணாக, இறக்கையாக, உல்லாசமாக உட்காரவைத்து, உச்சாணி கொம்பினிலே, ஊஞ்சல் கட்டி, உன்னை ஆட வைத்து வேடிக்கை பார்த்தால், மயில் இறகால், ஒரு விசிறி போல் உன்னை வீசிக்கொண்டிருப்பேன். அகத்தியனுக்கு இப்படி ஒரு கடுமையான தண்டனை என்று எண்ணாதே. என் குழந்தைகளுக்கு, நான் சீராட்டாமல், வேறு யாரடா சீராட்டுவார்கள். அந்த மாதிரி, அற்புதமான பாக்கியத்தை பெற்றவர்களடா, இங்குள்ள அத்தனை பேர்களும். என்னை மாபெரும் முனி என்று எண்ணாதே! நான் உள்ளத்திலும் குழந்தையடா. உங்களுக்கெல்லாம் ஏதாவது நன்றிக் கடன் செய்யவேண்டும் என்று ஆசை. அப்படி நீ என்ன அகத்தியனுக்கு செய்துவிட்டாய் என்று கேட்கலாம்? 

அந்தோ, அகத்தியனை முழுமையாக நம்பி, அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறார்களே, ஒவ்வொரு தொழிலையும், எதிர்காலத்தையே, அகத்தியனிடம் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களே எல்லோரும். அவர்களுகெல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் நன்றி கடன் செய்ய வேண்டாமா?  அந்த நன்றி கடனாக இப்பொழுது முதல் அகத்தியன் யாம் சொல்கிறேன்,

இன்று முதல் உங்களுக்கு எல்லாம் ஒரு புனிதத்தை யாம் தரப்போகிறேன். ஆக காலையிலே சொன்னேன், அகத்தியன் மைந்தனை திட்டினேன். ஏனடா ராகுகாலத்தில் அகத்தியனை நினைக்க மறந்தாய் என்று சொன்னேன். அதல்ல. சில சமயம் கடிந்து கொள்வது உண்டு. பூனை எலியை கவ்வுவதற்கும், தன் குட்டியை கவ்வுவதற்கும், வித்யாசம் உண்டடா. என் மைந்தன் தவறு செய்யக் கூடாது என்பதற்காகத்தான், அவசரப்பட்டான், மணியை கொண்டான், நேரமாயிற்று என்று புலம்பினான். இவன் ஏன் இந்த சித்தன் நிலையிலிருந்து இறங்கி வந்தான் என்று எனக்குப் புரியவில்லை. பட படப்புக் கூடாது. இன்னும் பக்குவம் வரவேண்டும் என்பதற்காகத்தான், மண்டையில் ஒரு குட்டு குட்டினேன். அதுதான் உண்மை. ஆக அவன் வருத்தப்பட்டாலும் சரி, வருத்தப்படாவிட்டாலும் சரி, என் மைந்தனை பக்குவப்படுத்தி உட்கார வைக்கவேண்டும் என்பதற்காகவும் இன்னும் பல அரிய செய்திகளை அவன் வாயால், உங்களுக்கெல்லாம் அகத்தியன் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வழி முறையை எடுத்துச் சொன்னேன் காலையில். அவன் கோபப்பட்டாலும் பரவாயில்லை, அகத்தியன் கவலைப் படப் போவதில்லை, அவனும் கவலைப்பட மாட்டான் என்பதற்காகச் சொன்னேன். அது மட்டுமல்ல, சந்திர அஷ்டமம் யாருக்குமே, கிடையாது என்று சொன்னேன். சந்திர அஷ்டமம் உண்டாக்கியதெல்லாம் யாரடா? மனிதன்தானடா. இறைவன் என்றைக்கடா, சந்திரா அஷ்டமத்தை உண்டு பண்ணினான். ஆக, இறைவனுக்கேதடா சந்திர அஷ்டமம். அவர்கள் எப்படியும் போகட்டும், ஏன் ஊர் கதைக்கெல்லாம் போகிறாய் என்று சொல்லாதே. இந்த பேச்சு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.

ஆகவே வந்த காரியம் பார்த்துவிட்டு, அபிஷேகம், ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மங்களா சாசனம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரே நிமிடத்தில், 27 நட்சத்திரங்களும், தேவாதி தேவர்களும், நந்தி தேவரும், சிவன் பிரம்மா விஷ்ணு,போன்ற தெய்வங்களும், ஒரே இடத்தில் உட்கார்ந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மங்களாசாசனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனந்தமாக 12 திருமண் இட்டுக்கொண்டு, விஷ்ணு பவனி வருகிற காட்சி எப்படி இருக்கிறது என்று தெரியுமா? தன்னை தேடி முக்கண்ணன் வந்துவிட்டான், அகத்தியன் வந்துவிட்டான், பிரம்மாவும் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார். 17 சித்தர்களும் உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போதெல்லாம் நம்பி தாமரை கண்ணை விரித்துப் பார்க்கிறார், அவ்வளவு சந்தோஷம், அவன் கண்ணிலே பூத்துக் குலுங்குகிறதடா! அந்த அருமையான காற்று, அருமையான செய்தி, அருமையான மலை இங்கு தான் இறைவன் இருக்கிறான். அகத்தியன் உட்பட 18 சித்தர்களும் இங்கு தான் உட்கார்ந்திருக்கிறார்கள். 17 சித்தர்களும், முக்கண்ணனும் சேர்ந்திருக்கிற காட்சி, வேறு எங்கும் கிடைக்காது. இவர்களுக்குத்தான் கிடைக்கிறது. கண் திறந்து பார்க்க முடியாது. உங்கள் அனைவருக்குமே, உணர்ச்சி பூர்வமாக கண்ணை மூடி திறந்தால் போதும், உங்களுக்கு அந்த காட்சி கிடைக்கும் என்பதை அகத்தியன் யாம் அறிவேன். அத்தனை அற்புதமான காட்ச்சிகள் எல்லாம் உண்டு. ஏன் என்றால்,

இந்த நம்பியை பற்றிய மிகப் பெரிய வரலாறு உண்டு, நிறைய பேருக்கு தெரியாது. விஷ்ணு, எத்தனையோ அவதாரங்களை எடுத்தாலும், நம்பி அவதாரம் என்று ஒன்று உண்டு. அதோ, அஹோபில மடத்து நரசிம்மனே, ஒருவனே பல ரூபத்தில் இருப்பதை இங்கு தான் பார்க்கிறேன். விஷ்ணு ஒருவன் தான் அஹோபில நரசிம்மனாக அமர்ந்திருக்கிறான். சிங்க சொரூபமாக, தங்கப் பல்லக்கில் உட்கார்ந்து ஆனந்தப் படுவது போல, அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் பத்னி, அவர் காலை பிடித்துவிட்டுக் கொண்டு, நம்மை எல்லாம் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த பாக்கியம் உங்களுக்கு மட்டுமல்ல, அகத்தியனுக்கும் கிடைத்திருக்கிறதடா! அகத்தியன்தான் வரச்சொன்னேன் என்றாலும் கூட, அகத்தியன் மேல் எத்தனை மதிப்பு அவர்களுக்கு. ஆக,மானிட ஜென்மங்களும் அகத்தியனை நம்புகிறார்கள். முத்தெய்வங்களும், அகத்தியனை நோக்கி வருவதெல்லாம், யான் இவ்வளவு பாக்கியம் பெற்றவனாகி, யாம் பெற்ற இன்பம் உங்களுக்கு தெரியவேண்டாமா? அந்த பாக்கியத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காகத் தான், ஆதரவோடு, கனிவோடு உங்களை எல்லாம் இங்கு வரச் சொன்னேன். இந்த அருமையான நேரத்திலே, ஆனந்தமான நேரத்திலே, உங்கள் அத்தனை பேர்களுக்கும், தேவ லோகத்தில் இருந்தால் என்ன சுகம் கிடைக்கும், என்ன மரியாதை கிடைக்கும், என்ன ஆனந்தம் கிடைக்குமோ, அந்த ஆனந்தத்தை அகத்தியன் யாம் கண்டிப்பாகத் தருவேன். அதுமட்டுமல்ல, அருகிலுள்ள சித்தர்களை பற்றி சொன்னால், சித்தர்கள் யாரடா? ஜமதக்னி, விஸ்வாமித்ரர், துர்வாசர் போன்ற முனிவர்களும், இன்னும் முக்கியமான பல முனிவர்கள் எல்லாம் இங்கு வந்து இந்த புளிய மரத்தடியில் அமர்ந்து இறைவனின் இடத்தில் ஆனந்தப் பட்டு, ஒன்று கூடி, ஒரு பட்டம் அளிப்பு விழா போல, எல்லோரும் கூடி பேசி கலந்து கொண்டிருப்பது போல, அவரவர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் சித்தர்களாக புற்றுக்குள்ளிலிருந்து வெளியே வந்தவர்கள். மூன்றடி உயரம் தான் இருக்கும் அந்த புற்று, ஆனால் அத்தனை பேர்களும், தங்களை சித்தர்களாக மாற்றிக் கொண்டு அதோ அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள்.  மங்களாசாசனம் முடிந்து விட்டது, நம்பி பெருமான் எல்லோருக்கும் ஆசி வழங்க, சிவபெருமான் இதோ பார்வதியுடன் அமர்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒளிப்படத்தில் காண்பிப்பது போல் தோன்றுகிறதல்லவா! அகத்தியன் வார்த்தை அலங்காரத்துக்காக இதை சொல்லவில்லை. நடக்க கூடியதை அப்படியே சொல்லுகிறேனடா! கதவு மூடி இருப்பதால், உங்கள் புறக்கண்ணுக்குத் தெரியாது, அகக்கண்ணுக்கு, கண்ணை மூடி திறந்து பார்த்தால், நம்பிமலைவாசன் ஆனந்தப் பட்டுக்கொண்டிருக்கிறார், லக்ஷ்மியோடு. முக்கண்ணனே வந்து வணங்குகிறானே அதுதாண்டா ஆச்சரியம். மேலும் அஹோபிலமே வந்து வணங்குகிற இந்த பாக்கியம் யாருக்கடா கிடைக்கும். சித்தர்கள் 17 பேரும் அவர்களை வணங்கிவிட்டு வருகிறார்கள். 

புற்றை பற்றி சொல்லும் போது, மிகப் பெரிய ஆச்சரியமான சம்பவம் இப்பொழுதுதான் நடந்திருக்கிறது. நானே எதிர் பார்க்கவில்லை. 

சித்தன் அருள் ........... வரும் சனிக்கிழமை அன்று தொடரும்!

8 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. நான் அகத்தியரை கண்டு பேசியிருக்கிறேன்.
    அது 2010 ஆம் ஆண்டு இருக்கும். நான் அப்போது வடக்கன் குளத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாத சம்பளம் வாங்குவதற்காக அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு பெரியவர், ஒரு பெண்மணியாரிடம் சற்று கோபமாக பேசுவதுபோல் பேசிகொண்டிருந்தார். ஆனால் அந்த பெண்மணியோ சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தார். முதலில் நான் அவர் அவரது உறவினராக இருக்கலாம் என்று எண்ணினேன். பின்பு அப்படி இல்லை என்று தெரிந்தது. பேருந்தும் வந்தது. நானும் அந்த பெரியவரும் பேருந்தில் ஏறினோம். அப்போது அந்த பெரியவர் என்னிடம் ஏதோ சொன்னார். ஆனால் அவர் வாய்வழியாக சொன்னது எதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால் அவர் மனத்தின் வழியாக சொன்னதெல்லாம் இதுதான், "கவலைப் படாதே! நீ இழந்த சக்திகள் அனைத்தையும் திரும்பப் பெருவாய்" என்பதே. நானும் சிரித்துக்கொண்டே அதை கேட்டுக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் "அவர் என்ன சொன்னாரென்று சிரித்துக்கொண்டிருக்கிறாய்" என்பது போல் என்னைப் பார்த்தார்கள்.
    நான் அவர் அகத்தியர் என்றே அறிகிறேன்.
    -நன்றி

    ReplyDelete
  3. last week I thought, weekly twice iruntha nalla irukumey nu...

    சித்தன் அருள் ........... வரும் சனிக்கிழமை அன்று தொடரும்!///
    Hopefully it will be continue. :)
    If you like, could you tell me the reason for this change. therinchakanum nu aaval. [samatham na sollunga]

    Thanks so so much Mr. Karthikeyan.
    Swamirajan

    Ps. Sorry for write in english, Tamil front not working.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையின் உலக இன்பங்களில் திளைத்து செல்லும் நமக்கு, அன்மீகப்பாதையில், சித்தர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆசிகளை வாங்கித் தந்து , பலரின் வாழ்க்கையை செப்பனிடுவதே தன் கடமை என்று வாழ்ந்து சென்ற அந்த புண்ணிய ஆத்மா மறைந்த நாள் 26/10. அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அடியேனின் ஒரு சிறு காணிக்கை, அடியவர்களுக்கும் சேர்த்து, ஒரு சித்தன் அருள் தொகுப்பு சனிக்கிழமை தரலாம் என்று தோன்றியது.

      Delete
    2. வணக்கம் திரு.கார்த்திகேயன், விளக்கத்திற்கு நன்றி சாமிராஜன்

      Delete
  4. Om Srim Lobamuthra Sametha Agatheesaya Namaha!

    ReplyDelete
  5. Om Sri Loba Mutra Sametha Agatheesaya Namaha!

    ReplyDelete