​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 22 December 2014

பிருகு மஹரிஷி குரு பூசை 02/01/2015 அன்று சென்னையில்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சென்னை அருகே உள்ள அனுமந்தபுரம் என்ற இடத்தில் பிருகு மஹரிஷி அவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி, மார்கழி மாதம் ரோஹிணி நட்ஷத்திரத்தில்  குரு பூஜை நடக்க உள்ளதாக ஒரு அகத்தியர் அடியவர் தெரிவித்தார்.. சப்த ரிஷிகளில் ஒருவர் பிருகு மஹரிஷி. சென்னை திருவோற்றியூரில் அகத்தியர்-நந்தி-பிருகு நாடி மற்றும் பிருகு ஜீவ நாடி வாசிக்கப்படுகிறது. அந்த நாடியில் இவ்வருடம் அய்யன் அகத்தியர் வாக்கின் படி அனைவருக்கும் குரு பூஜை அன்று விசேஷ மருந்து கொடுக்கும்படி அருள் வாக்காக வந்துள்ளது. அனைவரின் நன்மைக்காக சில நல்ல உள்ளங்கள் குரு பூஜைக்கான ஏற்பாடுகளில் இறங்கிஉள்ளனர். சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி பலரும் இவ்விழாவுக்காக வருகின்றனர். முடிந்தவரை அவ்விடம் சென்று அருள் பெறவேண்டுகிறோம். அந்த அருமையான அய்யன் அகத்தியரின் பாடல் அந்தாதி வடிவில்!
 
ஓங்கவே பிரிகுமுனி ஆசியும் தான் 
ஒரு சேர சித்தர்களின் ஆசியும் உண்டு 
பாங்குடனே கைபாகங்கள் செய் பாகங்கள் 
பக்குவமாய் காட்டுவித்தோம் மருந்தின் அளவை 
 
அளவுபடி என்சகமாம் சகத்திரம் குன்றா 
அழகான கமலமது திண்ணத் தொப்ப 
நாளதனில் கும்பமுனி வாக்கு சொல்ல 
நலமுடைய மரகதமும் மொட்டு விட்டு 
 
விட்டதொரு இதழ்தானே சிதைத்து சுண்ணம்
விதிப்படியே எண்மரக்கால் இரண்டும் நெல்லி 
தாட்டிகமாய் விதைசுத்தி சுண்ணம் ஆக்கி 
தஞ்சமென பலமளவு தூக்களவு 
 
அளவுமுறை பிடிநூறாம் அளவில் வாணி 
அத்துடனே இயற்கையதாம் மதுர பண்டம் 
தெள்ளவே சர்க்கரையும் தாள வெல்லம் 
தகும் அழகாய் ஓர் பகுதி கலவை செய்து 
 
செய்துமே மூன்றுப்படி அளவில் நெய்யும் 
சேர்த்துமே நலம் மதுரமது இத்துடனே 
மெய்யாக குரு மிளகும் சுக்குசுண்ணம் 
மருந்தான அரத்தையுடன் சீரகம் சீர் 
 
சீர்படுத்தி சுகந்தவேர் நீரிநோடும் 
சிவசிவமே குளிகைநலம் மழலையற்கே 
நேர்த்திபட பாகுவகை உயர்வாய் கூட்டி 
நல்விதமாய் ஒர்படிக்கு மேலாய் குளிகை 
 
மேலான ஓர்பகுதி நீரும் நன்று 
மங்கலமாய் குருவிழா பொலிவும் காண 
நிலத்தோர்கள் அதிசயிக்க வண்ணம் அப்பா 
நிர்மலமாய் சமதர்ம நியதி படி

விவரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் பார்க்கவும்.



நாடி வாசிக்கும் விவரம் பற்றி கீழ்க்கண்ட லிங்க் பார்க்கவும் 

ஓம் ஸ்ரீம் சத்குரு பதமே சாப பாவ விமோசனம்
ருண ரோஹ கிலேச விமோசனம்
சர்வதேவ சர்வசித்தி ஒளி ஸ்வரூபாய , ஆத்ம ரூபாய
குலவம்ச பிர்குவே நமஹ

எல்லோரும் சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்!

அழைப்பிதழை கீழே தருகிறேன்!





கார்த்திகேயன்!

1 comment:

  1. Aum Agasthya Maharishi Namah...Jyothi Vadive Namah..

    ReplyDelete