​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 2 December 2016

சித்தன் அருள் - 525 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பசு, கன்று குட்டியை ஈன்றவுடன், மனிதனுக்கு பால் தருவதில்லை. கன்றுக்குத்தான் பால் தருகிறது. பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான். முதலில் கன்று திருப்தியாக. திகட்ட, திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தைத்தான் மனிதன் எடுக்கவேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஆனால், இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா? என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான். எனவேதான், பசுக்கள் காப்பகங்களுக்கு சென்று உதவி செய்வது, குறிப்பாக, பரசுராம தேசத்திற்கு (கேரளா) எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது. மிகப்பெரிய புண்ணியமப்பா. கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும், ஹிமாச்சலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள், பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும். அதிலும், பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை, அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை, எவன் ஒருவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ, அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம். வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம். அதை வளர்ப்பதே  போதும். அது அவனை இறைவனிடம் அழைத்துச் செல்லும்.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] After a cow gives birth to a calf, it gives milk for its calf, not for man. Many cows are avtars of maha-rishis. Only after the calf drinks the milk to its fullest satisfaction, then only the remaining milk can be taken out by man. Amongst sins, the worst is denying milk to the calf. For this sin, there is neither forgiveness nor remedy. But man will cleverly argue that he cannot live if he has to follow all these protocols. That’s why helping cow shelters, particularly purchasing the cows being taken to Kerala desam [for slaughter] and taking care of them, without any expectation, is a very high punya. The divine grace, which cannot be obtained even by doing yajnas for crores of years or doing tapas in Himalayas, can be obtaining by caring for cows. In particular, those cows being sent for slaughter as they stopped yielding milk, if they are rescued and cared for by a person, he does not have to do any other puja or yajna, merely taking care of the cow will take him to God.

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete