​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 10 December 2016

சித்தன் அருள் - 533 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

"வில்வத்தால் ஆராதனை செய்வது எமக்கு பிரியம்" என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான். "வில்வத்தை ஏற்றுக்கொள்" என்றால் மனிதன் உண்ணமாட்டான். ஆனால் அதையே "பிரசாதம்" என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல, அன்போடு எதைக் கொடுத்தாலும், அதை இறை ஏற்றுக்கொள்ளும். வில்வத்தை பக்தியில்லாமல் நீ போட்டால், சிவன் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? பிடிக்காதது என்ற ஒன்றையும் கூட, பக்தியோடு படைத்தால் இறை அதை ஏற்றுக்கொள்ளும். எனவே, பக்தி, அன்போடு செய்யப்படும் செயலை அல்ல, அந்த செயலுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது. இன்னொன்று, வேறு மார்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், நெய் தீபத்திற்கு பதிலாக, வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலரோ, மலர்களை போடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமில்லை, தன் உள்ளத்தை தவிர.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] It is not that way. Any relationship with the Divine brings good to man. If you simply give bilva leaves to a man, he won’t accept; but he will eat it as prasad. Not just that, anything that is offered with love is accepted by the Divine. If you throw bilva leaves without bhakti, will Siva accept? Even something which is not liked, if offered with bhakti, Divine will accept. Hence, Divine is concerned with the bhakti, love behind the act, not the act itself. Those who are not Hindus do not offer ghee lamps, but different lights [eg candle]. Some [communities] never offer flowers. The Divine is accepting this also, is it not. The cosmos, mobile and immobile, is created by the Divine. There is nothing that a man can give to the Divine, except his heart.

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] The Divine has not written anywhere that “I am fond of aradhana with bilva (bael) leaves”.

    THE ABOVE IS THE FIRST LINE, INADVERTENTLY IT GOT OMITTED.

    ReplyDelete