​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 29 December 2016

சித்தன் அருள் - 551 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

பிரச்சினையே இல்லாத வாழ்க்கையை தா, என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும், இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால், அவ்விதமான அமைப்பு, யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம், தெளியாத மனிதனுக்கு எதுவுமே புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேர்ந்திருப்பதால், அவனுக்கு எதுவும் பிரச்சினையாகத் தோன்றாது. இந்த கருத்தை உன்னிப்பாக கவனித்து, மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால், மனிதனுக்கு, எக்காலத்திலும், எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை.

5 comments:

  1. ஈசன் அருள்.

    ReplyDelete
  2. Om sri lopamuthira sametha agathisaya namaga

    ReplyDelete
  3. அருமையான அறிவுரைகள் !

    ReplyDelete
  4. [ROUGH TRANSLATION] To pray for a life free from any problem, is not recommended. Even if you ask, Divine does not grant this. Such a status is not available to anyone.
    Only a jnani or an a-jnani sees life as problem-free. Reason being, to the ignorant man, nothing is clear. To the jnani, who has passed everything, nothing appears to be a problem. If you closely scrutinise this principle, and imbibe it deeply in mind, there is no suffering, at anytime or any situation or any circumstance.

    ReplyDelete