​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 16 February 2017

சித்தன் அருள் - 595 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா? மகான்கள், மகான்கள் நிலையிலேயே, மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி, சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் "எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்? என்பதை புரிந்துகொள்ளாமல், அதற்கு குதர்க்கமான பொருளைத்தான் பல மனிதர்களும் கொள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயோ அவர்கள் விதி அனுமதித்தால், யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து, சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் இந்த ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும், என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை, ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது, எமது கடமை என்றாலும், இறைவன் அனுமதித்தால், நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி இறை அனுமதிக்க மனிதர்கள் பலவற்றை செய்யாமல் இருந்தாலே போதுமப்பா. ஒருவனுக்கு ஒருவன் விதி மாறுபடுவது, ஒருவனுக்கு ஒருவன் அவன் மதி அதனால் மாறுபடுகிறது. ஒருவனுக்கு ஒருவனின் மதி மாறுபடுவதால் சிந்தனையும், செயலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில் பொதுவாக நாங்கள் ஒன்றை ஒருவனுக்கு கூறினால், அது இன்னொருவனுக்கு பொருந்தாது. நாங்கள் ஆதியிலிருந்து கூறுகின்ற விஷயம் இன்னமும் இங்கு சர்ச்சைக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். சிலரைப் பார்த்து "ருணம் பெற்றாவது தர்மம் செய்"‘ என்று கூறுகிறோம். இந்த ஒரு கருத்தையே இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்த நிலைக்கு எவ்வாறு அழைத்து செல்வது?

3 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தியரே சரணம்.....

    ReplyDelete
  2. எதுவாயினும் விதி ஜெய்பதர்ககதான் படைக்கப்பட்டு இருக்கிறது , இது முற்றிலும் உண்மை . கணேசன் அய்யாவை சந்திக்கும் முன்பு ஹனுமததாசன் அய்யாவை ஒருமுறையேனும் பார்க்கவேண்டும் என்று மிகவும் துடித்தேன் . ஒரு முறை எதேச்சியாக அவரை அழைக்கும்போது இணைப்பு வந்தது எனக்கு மிகவும் மகழ்ச்சி . அவரும் வர சொன்னார் . நானும் என் அத்தையுடன் சென்னை வடபழனி அவர் இல்லத்திற்கு சென்றோம் என் அத்த்தைக்கு திருமணமாகி 15 ஆகுகிறது அனால் குழந்தை இல்லை எத்தைனையோ கோவில் சென்று எவ்வவளவோ பிராத்தனை பரிகாரம் செய்தார் ஆனால் பலன் ஏதும் இல்லை . அப்படி இருக்க ஹனுமத்தாசன் அய்யாவை பார்க்க சென்றோம் . எங்கள் துரதிர்ஷ்டம் அவர் வீட்டை காலி செய்து கொண்டு சென்று விட்டதாகவும் இனிமேல் நாடி படிதப்பில்லை என்றும் சொன்னார்கள் நான் கூட ஏன் என்று யோசிதேர்ன் அதற்கான பதில் எனக்கு பின்நாளில் தான் கிடைத்தது ( அந்த சமயம் அகத்தியர் அவர் மீது கோவம் கொண்டு நாடி படிக்க ஆறு மதம் தடை போட்டார் அந்த நேரத்தில் தான் நான் சென்றேன் ) மிகுந்த மன வருத்ததுடன் வீடு திரும்பினேன் . பிறகுதான் கணேசன் அய்யாவுடன் தொடர்பு ஏற்பட்டது . இதை ஏன் சொல்கிறேன் என்றால் என் அத்தைக்கு கொடுப்பினை இல்லை . கணேசன் சாரிடம் அத்தை பற்றி கேட்டேன் ஆனால் அகத்தியர் பதில் கூற மறுத்துவிட்டார் . எல்லா விதி என்று விட்டுவிட்டேன் . இப்போது என் அத்தை ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் .....

    ReplyDelete
  3. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete