​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 16 March 2017

சித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எத்தனைதான் தெய்வீகம், மனிதன் வழியாக சிலவற்றை செயல்படுத்த எண்ணினாலும், தெய்வீகமே மனித வடிவம் எடுத்து வந்தாலும்கூட, மற்ற மனிதர்களின் கர்மவினைகளை அனுசரித்துதான் செயலாற்ற இயலும். இஃது ஒருபுறமிருக்க இத்தனை காலங்கள் விதவிதமாக இறைவன் குறித்தும், தர்மங்களை குறித்தும், நேர்மையைக் குறித்தும் நாங்கள் வாக்கினைக் கூறியிருக்கிறோம். இது எத்தனைபேர் மனதிலே நன்றாகப் பதிந்திருக்கிறது? எத்தனை நேர்மையாக, வெளிப்படையாக நாங்கள் இங்கு பல காரியங்களை இறைவன் அருளால் செய்ய அருளாணையிட்டிருக்கிறோம்? இங்கு வருகின்ற மனிதர்கள் இந்த குடிலை எப்படி பார்க்கிறார்கள்? இந்த சுவடியை எப்படி மதிக்கிறார்கள்? என்பது எமக்குத் தெரியும். மகான்கள் என்பதால் எம்மைப் பொருத்தவரை, அனைவருமே எமது சேய்கள்தான். இத்தனை சிறப்பாக, இத்தனை உயர்வாக, இத்தனை அழகாக பல்வேறுவிதமான நுணுக்கமான கருத்துக்களை எடுத்துக் கூறினாலும்கூட மனிதர்கள் அதனை புரிந்துகொள்வதில்லை, அல்லது தங்கள், தங்கள் தனிப்பட்ட துன்பங்கள் தீர்ந்தால்தான் நம்புவேன் என்ற ஒரு எதிர்பார்ப்போடு வருவதும், பெரும்பாலான கஷ்டங்களுக்கு தங்களுடைய முட்டாள்தனம்தான் காரணம். அந்த முட்டாள்தனத்தைத் தந்த விதிதான் காரணம். அந்த விதி ஏறி அமர்ந்துள்ள மதிதான் காரணம். இவற்றையெல்லாம் மாற்றுவதற்குதான் சித்தர்கள் சில வழிமுறைகளைக் காட்டியிருக்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் தவறிவிட்டோமே? என்று இன்னும் ஒருசிலரைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ளவில்லை.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete