​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 March 2017

சித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே, எமை நாடுகின்ற மனிதர்களுக்கு, ஆதி முதல் அந்தம் வரை பல்வேறு தோஷங்கள் இருக்க, யாமும் அதையெல்லாம் மனதில்கொண்டு, இறைவனின் திருவடியை வணங்கி, எமை நாடிய ஆத்மா பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இந்தப் பிறவியிலே இப்படியொரு சிக்கலில் இருக்கிறது. இந்த ஆத்மாவை மன்னித்து, இந்த ஆத்மாவிற்கு நல்லதொரு வழியைக் காட்டவேண்டும் என்றுதான். யாமும் பிரார்த்தனை செய்து அந்த இறைவனிடம் முழு சரணாகதி செலுத்தி, அந்த பரந்த பரம்பொருள் எதை உணர்த்துகிறதோ அதை எமை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்துகிறோம். ஆயினும் கூட ஒரு துன்பம் வந்த உடனேயே சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் அந்த துன்பம் போய்விடாதா? என்ற ஏக்கம்தான் மனிதனிடம் இருக்கிறது. கடுமையான பாவவினைகளின் காரணமாகத்தான் ஒரு மனிதனுக்கு கடும் வியாதியும், கடுமையான தன சிக்கலும், ருணமாகிய கடனும், கடும் பொருளாதார நெருக்கடியும், உறவு சார்ந்த சிக்கல்களும் இன்னும் பிற துன்பங்களும் வருகிறது. எனவே ஒரு மனிதன் தன் வாழ்வியல் முயற்சிகளோடு பரிபூரண சரணாகதி பக்தியையும் வளர்த்துக்கொண்டால் கட்டாயம் மெல்ல, மெல்ல அவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete